Sunday, 22 March 2015

SILUVAI KAATCHI

சிலுவை காட்சி

கெத்சமெனே காவிலே
யூதாஸ் முத்தம் செய்யவே
யூதர் அவரை கட்டவே

நிந்தை கஸ்தி அடைந்தாரே
தந்தை சித்தம் ஆகவே

நாம் சகிக்க அவர் இக்கட்டு
குட்டறை
 பொல்லாப்பும் பட்டு
கூர் முள் முடியும் சூட்டபட்டார்
கூர் ஆணி தேகம் பாய
வாரடியும் தாங்கினார்

மானிடர்க்கு மன்னிப்பு கிட்டிட
நல் பாக்கியம் நாம் பெற்றிட
மும் மணி நேரம்   மாந்தர்க்காய்
கல்வாரியில் தொங்கினார்
யூதரின் ராஜா எனும் பட்டத்துடன்

           
                          பால்ராஜ் சாமுவேல்

Sunday, 1 March 2015

My line on Sun rise and Clouds


Who is my neighbour?

எனக்கு பிறன் யார்? (லூக் 10. 25-37)

இறை மகன் இயேசுவிடம் மறை
அறிந்த நியாய சாஸ்திரி தன்னை
நீதிமானாய் அவர் காணும்படியாய்
எனக்கு பிறன் யார்? என வினவினான்
கதை கூறி விடையளித்தார் இறை மகன்
.

                  கதை
பாடு பட்டு சேர்த்த பணத்துடன்
காடு மலை கடந்து, காரிருளில்
எரிகோவுக்கு பயணிக்கையில்
மறித்தனர் சில கள்வர்கள், காயப்படுத்தி
பறித்தனர் அவன் பணத்தை 


செங்குருதி வெள்ளத்தில் தவித்தான்
செங்கதிரோன் காயங்களை குத்த - வலி
தாங்கிடாமல் பதறினான், கதறினான்
உரத்த குரல் கொடுத்தும் பயனில்லை
உதவிக்கு ஓர் கையும் வரவில்லை.

ஆலய ஊழியன் ஆசாரியன் - அவன்
அவல குரல் கேட்டு தன் விழி தனை
சுழல விட்டு மெளனமாய் நின்றான்
ஆலயம் செல்ல தாமதித்திடுமென
பக்கமாய் விலகி போனான்.

லேவியன் அவ் வழியே வந்தான்
ஆவி போக அவன் அலறுவதை கேட்டு
மனமுடைந்தான் - எனினும்
நெருங்கிட அருவருப்படைந்தவனாய்
மறு வழி நோக்கி மறைந்திட்டான்.

சமாரியன் அவன் அவ குரல் கேட்டு
மனம் பதறியவனாய் ஓடினான் அவனருகே
மனதுருகி அவனை கையிலணைத்து
காயங்களில் எண்ணை வார்த்து - அவன்
உபத்திரவம் நீங்க உதவினான்.

சமாரியன் தன் வாகனத்தில் அமர்த்தி
சத்திரத்தில் அவனை சேர்ப்பித்தான்
சத்திரத்தானிடம் பணம் கொடுத்து
பத்திரமாய் பாதுகாக்க உத்தரவிட்டு
மன மகிழ்வுடன் விடை பெற்றான்

இவர்களில் பிறன் யார் என இயேசு வினவ
சமாரியனே என்றுரைத்தான் நியாய சாஸ்திரி
துன்பத்தில் துவழ்ந்த அவன் காயங்களை
துடைத்தெடுத்தவன் தான் அவனுக்கு பிறன்-என
உள்ளத்தில் உணர்ந்தவனாய் உரைத்தான்!


                                            பால்ராஜ் சாமுவேல்