Friday, 25 September 2015
Wednesday, 23 September 2015
கண்டெடுத்த தாய்
கண்டெடுத்த தாய்
வாழ்க்கை எனும் தோட்டத்தில்
வாசமலராய் பாசத்தை வீசிடும்
அன்புத்தாய் அகன்று விட்டாள்
காண முடியா லோகத்திற்கு
பாசமிழந்த இதயத்தை முட் செடிகள் மூடின
தோட்டத்தை படைத்த இறைவன்
வாட்டமடைந்தான் – ஓர் வாச மலரை
அவன் கண்டடைய செய்தார்
அன்பற்ற அவன் வாழ்க்கை படகு
பண்பற்ற பாதையிலே செல்கையிலே
கண்டெடுத்த தாய் அவன் வாழ்க்கை
படகினை
அன்புக் கடலிலே மிதக்க விட்டாள்
அன்புக் கரங்களால் அன்னமிட்டாள் - தன்
புன் சிரிப்புடன் பாசத்தை பகிர்ந்தளித்தாள்
கருணை கண் வீசி அவன் இருள் நீக்கினாள்
கண்டெடுத்த தாய் அவன் வாழ்வின் ஒளி விளக்கானாள்
பால்ராஜ் சாமுவேல்
Tuesday, 22 September 2015
சிந்தனைத் துளிகள்
1.
இறைவனை இழித்துப் பேசிடாதே
குறைகள் நிறைந்திடும்!
2.
காலமதை காலாட்டி கழிக்காதே
ஓலமிட்டு அழ நேரிடும்!
3.
சோம்பேறியாய் திரிந்திடாதே - பல
சோதனை க்குள்ளாவாய்!
4.
பஞ்சமென்பது நெஞ்சத்தில் வேண்டாம் – மன
சஞ்சலத்தில் முடியும்!
5. கஞ்சத்தனம் கைகளில் வேண்டாம்
வஞ்சம் வந்து சேரும்!
6. கையூட்டு நடத்த வேண்டாம் – உன்
கை பூட்ட படலாம்!
- பால்ராஜ்
சாமுவேல் -
Tuesday, 15 September 2015
Friday, 4 September 2015
ஆசிரியர் - Teacher
என்னிடத்திலுள
ஆறறிவையும்
கண் முன்னால்
காட்டியவர் ஆசிரியர்
என் எண்ணத்தை
ஏட்டில் எழுத
எழுத்தறித்தவர்
என் ஆசிரியர்
கல்வி வானில்
சிறகடிக்க
பயில்வித்வர் என்
ஆசிரியர்
வாழ்வின் நல்
வழிகளை தன்
விழியால்
மொழிந்தவர் ஆசிரியர்
பால்ராஜ் சாமுவேல்
வாழ்க ஆசிரியர் குலம்
வளர்க அவர் பணி
Wednesday, 2 September 2015
கண்ணில் மின்னிடும் கன்னியே
கண்ணில் மின்னிடும் கன்னியே
நெஞ்சில் தஞ்சம் புகுந்திடாயோ
- உன்
பார்வை பாசக் கதவை தட்டுதம்மா
புன்னகையில் பாச மலர் அரும்புதம்மா
வாய் திறந்தால் முத்துப் பல் உதிர்ந்திடுமோ
பூவிதழில் அன்புக் குரல் மலரவில்லையே
- நீ
சொல்லத்தான் நிணைக்கின்றயோ
சொற்களை நாணம் தடுக்கின்றதோ
ஒடும் மேகங்கள் உன் நிணைவினை
பாடும் தோழி என்றெண்ணினாயோ - உன்
அகத்தின் அழகினை முகத்தினில் காண்
என சொல்லாமல் சொல்கின்றாயோ...
-பால்ராஜ் சாமுவேல்-
Subscribe to:
Posts (Atom)