கிறிஸ்து வருகை
மந்தை ஆயர்களுக்கு வானிலே தூதர்கள் காட்சி!
விந்தையாய் தேவ மைந்தன் அவதரித்த நற்செய்தி கேட்டு
அச்சம் நீங்கி விரைந்தனர் , தேவ பாலனைக் கண்டு
பட்சமுடன் பணிந்தனர் இரட்சகர் இயேசுவை!
சாஸ்திரிகளுக்கு வானிலே விண்மீன் காட்சி!
யூதருக்கு ராஜா பிறந்தாரென மகிழ்ச்சி அடைந்து
முன்னணை முன்னதாய் முழங்காலிட்டனர்
பொன், வெள்ளி தூபவர்க்கம் படைத்தனர்!
மானிடர் நமக்கோ சிலுவைக் காட்சி!
முட் கிரீடம் சூடினார் நமை இரட்சித்திடவே
மீண்டும் இயேசு வருகிறார், ஆயத்தமா நாம்?
சிந்திப்போம் இந்த வருகையின் காலமதில்!
உள்ளத்தை வெள்ளையடிப்போம் இருள் நீக்கி
கள்ளமற்ற அன்பினால் அலங்கரிப்போம்
உள்ளதை எளியவர்க்கு பகிர்ந்தளிப்போம் – உள்ளத்தில்
கிறிஸ்து பிறப்பார், நித்திய மகிழ்ச்சி
தங்கிடும்.
-பால்ராஜ்
சாமுவேல்-