வாழ்க்கையின் பாலங்கள்
பாலருக்கு அன்னை அன்பின் பாலம்
மாணவருக்கு ஆசிரியர் அறிவின் பாலம்
வாலிபருக்கு நண்பன் நட்பின் பாலம்
ஆடவருக்கு இல்லாள் இல்லறத்தின் பாலம்
முதியவருக்கு பேரப் பிள்ளைகள் உறவின் பாலம்
பருவ காலங்கள் மாற பாலங்கள் மாறும்
பாலங்கள் மாற வாழ்வின் பாதைகள் மாறும்
சந்திக்கும் பாதைகளை இன்புற கடந்தால்
எத்திக்கும் தித்திக்கும் வாழ்க்கை பயனத்தில்
பாலங்கள் எல்லாம் வாழ்வின் மேம்பாலங்களே
பால்ராஜ் சாமுவேல்