சகேயு அத்தி மரம் ஏறினான்
ஏக பரன் இயேசுவைக் காண
இயேசு சிலுவை மரம் ஏறினார்
மானிடர் நம் பாவம் போக்கிடவே
மர மனம் கொண்ட சகேயுவை
அரவணைத்தார் அன்புடன் இயேசு
மரமாகி விட்ட மானிடர்
உள்ளத்தின்
பாரம் நீக்க வாசலில்
நிற்கின்றார் இயேசு
இயேசுவுக்கு இல்லமும்
உள்ளமும் திறந்தான்
சகேயுவின் வீட்டுக்கு
இரட்ச்சிப்பு கிடைத்தது
உன் இதய கதவை திறந்திடாயோ, தந்திடாயோ
இயேசு அளிப்பார் நித்திய
மகிழ்ச்சி உன் வாழ்வில்
பால்ராஜ்
சாமுவேல்