Sunday, 16 November 2014

மலர்களிலே ராஜா

மலர்களிலே ராஜா

மலர்களிலே அழகியவனாம்
மலர்களின் மன்னவனாம்
விண்ணில் கதிரவன் ஒளி வீச
மண்ணில் மலர் மணம் வீச
ரோஜா மலர் ராஜா மலர்ந்தான்

நல் மனம் கொணட அவன்
புவியின் புன்னகை மன்னன்
கல் மனம் கொண்ட மானிடரை-தன்
முள் கொண்டு தடுத்திடும் - நெறி தவறா
முடி சூடா மன்னனாய் மலர்ந்தான்

மன்னவர் பலர் அவன் அழகை கண்டு
கண் கவர் ஆடை தனில் அணிந்தனர்
மங்கையர் பலர் அவன் எழில் கண்டு
சூடினர் தம் கரிய கூந்தல் தனில் -
உலா வந்தான் மங்கையர் மகுடமாய்


வந்தவரை வரவேற்றான் பன்னீராய்
இணைந்தவரை வாழ்த்த எண்ணிடவே
ஒன்றிணைந்தான் மலர் மாலையாய்
தவழ்ந்தான் மண மக்களின் கழுத்தினில்-நல்
மணம் வீசி மகிழ்வித்தான்

இவ்வுலகினின்று பிரிந்தவரை கண்டிடவே-மலர்
மன்னன் மனம் மடிந்தவனாய் - தன்
இதழ்களை உதிர்த்தான் கண்ணீராய் 

பிரிந்தவர் இறுதி பயணத்தில் கலந்தவனாய்
அர்ப்பணித்தான் தன்னையும் கல்லரையில்.

           பால்ராஜ் சாமுவேல்

Saturday, 8 November 2014

God's Own Man

GOD’s own man

Created man in His own image
Housed him in His Eden Garden
Raised him with no labor
Implicit his loneliness
Supplemented with a woman
Taught things to do and not to do
Inquired missing their presence
Annoyed but not put an end to mankind
Navigated a new life with lots of promises
                                                            mps

Jesus continues to do all the above for you today, tomorrow and for ever.

Sunday, 2 November 2014

அழைப்பின் குரல்

 விந்தை கிறிஸ்து கந்தை பூண்டார் - உன்
நிந்தை நீங்க - அழைப்பின் குரல் ஏற்றிடாயோ

விண்ணவர் மண்ணில் மானிடனனார் - உனை
கண்ணிமை போல் காக்க - அவர் கரம் பற்றிடாயோ

எல்லையில்லா ஞானபரன் புல்லணையில் பிறந்தார் - உன்
தொல்லை நீங்க - அவர் பாதம் தொடர்ந்திடாயோ
மாசில்லா மன்னன் நீசனாய் அவதரித்தார் - நீ
காசினியில் களிப்புடன் வாழ - உனை அர்ப்பணித்திடாயோ

மேசியா நிதம் உன் இதயம் வாசம் செய்வார் - பூரண
ஆசீர்வாதம் தங்கிடும் உன் வாழ் நாளெல்லாம்.
                                                   பால்ராஜ் சாமுவேல்