Sunday, 2 November 2014

அழைப்பின் குரல்

 விந்தை கிறிஸ்து கந்தை பூண்டார் - உன்
நிந்தை நீங்க - அழைப்பின் குரல் ஏற்றிடாயோ

விண்ணவர் மண்ணில் மானிடனனார் - உனை
கண்ணிமை போல் காக்க - அவர் கரம் பற்றிடாயோ

எல்லையில்லா ஞானபரன் புல்லணையில் பிறந்தார் - உன்
தொல்லை நீங்க - அவர் பாதம் தொடர்ந்திடாயோ
மாசில்லா மன்னன் நீசனாய் அவதரித்தார் - நீ
காசினியில் களிப்புடன் வாழ - உனை அர்ப்பணித்திடாயோ

மேசியா நிதம் உன் இதயம் வாசம் செய்வார் - பூரண
ஆசீர்வாதம் தங்கிடும் உன் வாழ் நாளெல்லாம்.
                                                   பால்ராஜ் சாமுவேல்

No comments:

Post a Comment