Tuesday, 30 December 2014

New year Wishes

 WISH  YOU  ALL   A

 Joyful  year
           to delight your life
Colorful  year  
           to glitter your life
Victorious  year
                          to cheer your life
Wonderful year
                   to enchant your life
Blessed  year
         to beautify your life

               M.Paulraj Samuel

Saturday, 13 December 2014

மதம் மாற்றமா? மனம் மாற்றமா?



மதம் மாற்றுதல் மனிதனின் முயற்ச்சி
மனம் மாற்றுவது இறைவனின் செயல்

மதம் மாற்றம் உன் இடம், பெயர் மாற்றமே
மனம் மாற்றம் உன் உள்ளத்தின் உரு மாற்றம்

மதம் மாற்றம் உன் வாழ்வின் வழி மாற்றமே
மனம் மாற்றம் உன் வாழ்வில் ஒளியேற்றும்

மனிதன் போடுவது மதக் கணக்கு
இறைவன் தேடுவது உன் மன விளக்கு

விண்ணவர் உனை தேடி வந்தார் - என் இயேசு
உன் உள்ளமே அவர் ஆலயம் என்றார்

தன்னையே ஈந்தார் மண்ணுயிர்க்காய் - என் இயேசு
மானிடர் அணைவரையும் விண்ணகம் சேர்க்கவே
.


                             பால்ராஜ் சாமுவேல்

Meaning of Christmas


Saturday, 6 December 2014

கிறிஸ்மஸ் காலம்

      கிறிஸ்மஸ் காலம்

காலங்களில் கடுங்குளிர் காலம்
ஞாலம் கண்ட பொற்காலம்
கிறிஸ்து பிறந்த நற் காலம்
கிடைத்தற்கரிய கிருபையின் காலம்


விண்ணவர் வருகையின் காலம்
மண்ணவர் மகிழ்ந்திடும் காலம்
ஆடி
ப் பாடி துதித்திடும் காலம் - தேவனை
தேடி நாடி கண்டடையும் காலம்


பரலோக வாஞ்சை நிறைந்திடும் காலம்
சுவிஷேச பணிக்கு அழைக்கும் காலம்
அர்ப்பணிப்போம் நம் வாழ்வின் காலம்
செயல்படுவோம் ஆத்ம அறுவடை காலம்

                
                                         பால்ராஜ் சாமுவேல்