மதம் மாற்றுதல் மனிதனின் முயற்ச்சி
மனம் மாற்றுவது இறைவனின் செயல்
மதம் மாற்றம் உன் இடம், பெயர் மாற்றமே
மனம் மாற்றம் உன் உள்ளத்தின் உரு மாற்றம்
மதம் மாற்றம் உன் வாழ்வின் வழி மாற்றமே
மனம் மாற்றம் உன் வாழ்வில் ஒளியேற்றும்
மனிதன் போடுவது மதக் கணக்கு
இறைவன் தேடுவது உன் மன விளக்கு
விண்ணவர் உனை தேடி வந்தார் - என் இயேசு
உன் உள்ளமே அவர் ஆலயம் என்றார்
தன்னையே ஈந்தார் மண்ணுயிர்க்காய் - என் இயேசு
மானிடர் அணைவரையும் விண்ணகம் சேர்க்கவே.
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment