லெந்து காலம்
பருவங்களில் வசந்த காலம்
மரம் செடி துளிர் விடும் காலம்- நறு
மலர் மணம் வீசிடும் சுகந்த காலம்
தென்றல் தேடி வரும் இனிய காலம்
கிருத்தவர்க்கோர் கிருபையின் காலம்- இவ்வுலக
இச்சைகளை உதிர்த்திடும் இலையுதிர் காலம்
ஆவியின் கனிகளால் நிறைந்திடும் காலம்
ஆத்தும ஆதாயம் செய்திடும் அருவடை காலம்
உபவாச காலம்
உடலை வருத்தி பாவத்தை வெறுத்து
உள்ளமதை சுத்திகரிக்கும் காலம்
நாவடக்கி முழங்கால் முடக்கி
கர்த்தருடன் உறவாடும் காலம்
உலக இச்சைகளை இடை கட்டி
பரலோக வாஞ்சையுடன் வாழும் காலம்
அவர் அன்பை ருசித்து புசித்து
சாட்சி பகர்ந்திடும் காலம்
பால்ராஜ் சாமுவேல்