மாலை சூடவா!
விண்ணையும் மண்ணையும் படைத்து
என்னையும் இவ்வுலகில் படைத்த இறைவா-உமை
நினைத்து பாமாலை சூடவா - இல்லை
உடல் நலம் அளித்து மன பலம் அளித்து - வளம்
கடல் நிறை அளித்து கண்ணிமைபோல் காத்த - உமை
நினைத்து பூமாலை சூடவா - இல்லை
கொடிய என் பாவம் போக்க சிலுவையில்
சூடினிரே முட் கிரீடம், உயிர் நீத்தீரே - உமை
நினைத்து கண்ணீர் மாலை சூடவா - இல்லை
இவ்வுலகின் இன்னல்களை தாங்கி
பூவுலகின் மாந்தரை உம் பாதம் சேர்த்திட
என்னையே மாலையாய் சூடிடவா!
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment