என் தாய்
தன்னலம் கருதாமல் எனை
இவ் வையகம் ஈன்ற தாயே
பாலூட்டி பாசத்தோடு வளர்த்தாயே
தாலாட்டி துயில வைத்தாயே – உன்
அன்பினை அன்று அறியாததேனோ என் தாயே!
அன்போடு அழகாய்
அரவணைத்தாயே
துயிலும் போதும் எனை நினைத்தாயே
பயில பள்ளிக்கு அழைத்தாயே – நல்
பண்புகள் பல பயிற்றுவித்தாயே – அதன்
பயன்தனை அன்று உணராததேனோ என் தாயே!
என் குறை குணம் கண்டு வைதாயே
பின் மறைவில் மனம் பதறி அழுதாயே
இவ் வுலகின் மன்னனாய் எனை பார்த்தாயே
உன் கண்ணின் கரு விழியாய் எனை காத்தாயே
என் கல் மனம் இன்று கரைகின்றதே
அதை நினைந்து, என் இனிய தாயே!
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment