Tuesday, 29 March 2016

இயேசுவின் கண்கள்


         இயேசுவின் கண்கள்

கருவில் உருவாகும் முன்னே காணும் கண்கள்
பாலரை அன்பாய் அழைக்கும் பாசக் கண்கள்
மாணவர்க்கு அறிவூட்டிடும் ஞானக் கண்கள்
வாலிபர்க்கு வழி காட்டிடும் ஒளி வீசும் கண்கள்
நீசரை நீக்கிடாமல் நேசமுடன் பேசும் கண்கள்
துன்புற்றோர் துயர் துடைக்கும் கருணைக் கண்கள்
நோயுற்றோர்  பிணி நீக்கும் அருமருந்துக் கண்கள்
பாதை தேடி பதைத்து நிற்போரை தேடும் கண்கள்
சபையை சுத்திகரித்திட எச்சரித்திடும் தூயக் கண்கள்
இம்மையில் நாம் இன்புற இமைக்க மறந்த கண்கள்
மறுமையில் நாம் மாண்புற சிலுவையில் ரத்தக் கண்கள்


                    பால்ராஜ் சாமுவேல்

Friday, 25 March 2016

காட்சியும் ... சாட்சியும்

கிழக்கு வானிலே வால் நட்சத்திர காட்சி
யூதரின் ராஜா கிறிஸ்து பிறந்தாரென சாட்சி

கொல்கொதா மலையில் கொடூர சிலுவைக் காட்சி
இயேசுவே யூதரின் ராஜா என அரசன் சாட்சி

வெற்றுக் கல்லறை இத்தரையில் இன்றும் காட்சி
வெற்றி சிறந்தவர் மூன்றாம் நாள் உயிர்த்து சாட்சி

காயப்பட்ட கரங்களை காட்டி தோமாவிற்கு காட்சி
கண்டு விசுவாசித்த தோமா இந்தியர் நமக்கு சாட்சி

வானங்களின் நடுவே இயேசுவின் வருகை காட்சி
காண காத்திருப்போம் கருத்துடன் நற் சாட்சியாய்


பால்ராஜ் சாமுவேல்


Saturday, 19 March 2016

இயேசு ராஜாவின் பவனி

எருசலேம் நகரில் இறைமகன் இயேசு பவனி
குருத்தோலை பிடித்து  மக்கள் குதூகல பவனி                
தேவ மைந்தனுக்கு ஓசன்னா முழங்கும் பவனி
வேதம் நிறைவேறிட வேந்தரின் வெற்றி பவனி 
 
பாவி நமக்காய் மரித்திட துவக்க பவனி- தன்
ஆவியை சிலுவையில் துறக்க பவனி
சாத்தானை அழித்திட சாந்தமாய் பவனி -  நாம்
பரிசுத்தம் பெற சிலுவை நோக்கி பவனி
                      பால்ராஜ் சாமுவேல்