இயேசு ராஜாவின் பவனி
எருசலேம் நகரில் இறைமகன்
இயேசு பவனி
குருத்தோலை பிடித்து மக்கள் குதூகல பவனி
தேவ மைந்தனுக்கு ஓசன்னா
முழங்கும் பவனி
வேதம் நிறைவேறிட
வேந்தரின் வெற்றி பவனி
பாவி நமக்காய் மரித்திட
துவக்க பவனி- தன்
ஆவியை சிலுவையில் துறக்க
பவனி
சாத்தானை அழித்திட
சாந்தமாய் பவனி - நாம்
பரிசுத்தம் பெற சிலுவை
நோக்கி பவனி
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment