Saturday, 6 February 2016

தேனீக்கள்

தேனீக்கள்

தடாகத்தின் வெள்ளித் தட்டிலே
தவழ்ந்திடும் செந்தாமரை கண்ட
செந்நிற தேனீகள் சந்தடி இன்றி - தாமரை
செவ்விதழில் அமர்ந்து சிந்து பாடியே
செந்தேனை பருகி பரவசமடைந்தனவே!


செந்நிற தேனீக்களின் எழில் கண்டு
செம்மீன் துள்ளி நடனமாடியது
மெல்லிய இடை கொண்ட பூங்கொடி
துல்லியமாய் அசைந்திட பறந்தனவே
செந்நிற தேனீக்கள் செவ்வானத்தில்!
                 

பால்ராஜ் சாமுவேல்


No comments:

Post a Comment