முதுமை ஒரு புதுமை
ஆறு பத்து ஆண்டுகள் என் வாழ்வினில்
அறுபது நாட்களாய், கடந்தது கனவாய்
அறுபதாம் ஆண்டு தொடங்கின நாள் முதல்
ஆறு நொடிகள் அறுபது நாட்களாய் கனத்தது
சுதந்திரமாய் இயந்திரமாய் இயங்கினேன்
மந்திரமாய் மறைந்தது அறுபது ஆண்டுகள் - இன்று
பத்திரமாய் நாற்காலியில் ஒரு சித்திரமாய்
விசித்திரமாய் காலத்தை கழிக்கின்றேன்
ஆம்,
முதுமை பழமையில் ஒரு புதுமை!
பால்ராஜ்
சாமுவேல்
No comments:
Post a Comment