Tuesday, 20 July 2021

காலைக் கானங்கள்

  

சேவலின் கூவல் 

விழித்திட அழைக்கும் கானம்.


சிட்டுக் குருவியின் கீச்சொலி

சுறு சுறுப்பினை  கூட்டும் கானம்.


காகத்தின் கரைதல்

ஒற்றுமையை ஒலிக்கும் கானம்.


மயிலின் அகவுதல்

மனதை நெகிழ்விக்கும் கானம்.


குயிலின் கூவுதல்

செவிக்கினிய இசையுட்டும் கானம்.


பச்சைக் கிளியின் கொஞ்சும் மொழி

மழலையரை மகிழ்விக்கும் கானம்.


                பால்ராஜ் சாமுவேல் 















No comments:

Post a Comment