வாலிபனே!
பாவ வனத்தில் தவிக்கும் வாலிபனே
ஜீவ தண்ணீர் நானே என்கிறார் இயேசு
அருந்திடாயோ தாகம் தணிந்திடுமே
உன் ஆத்தும தாகமும் தீர்ந்திடுமே
பாவ இருளில் மருள்கின்ற வாலிபனே
நானே நல் மேய்ப்பன் என்கிறார் இயேசு
பற்றிடாயோ அவரை பின்பற்றிடாயோ
ஆதரிப்பார் அரவணைப்பார் அன்புடனே
பாவ பாரம் சுமக்கும் வாலிபனே
ஜீவ அப்பம் நானே என்கிறார் இயேசு
புசித்திடாயோ அவரன்பை ருசித்திடாயோ
ஆசீர் பெருகிடுமே வாழ்வினிலே
இம்மையில் இன்பத்தை நாடும் வாலிபனே
நானே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு - உனை
அர்ப்பணித்திடாயோ அவர் வழி நின்றிடாயோ
மறுமையில் உனக்களிப்பார் நித்திய ஜீவன்
பால்ராஜ் சாமுவேல்