Thursday, 1 January 2015

Pudhiyathor Ulagam



புதியதோர் உலகம்!

ஆட்சிகள் மாறுவதும் கட்சிகள் மறைவதும்
சட்டங்கள் திருத்தலும் திட்டங்கள் மாற்றுதலும்
முடியாட்சிக்கு முயல்வதும் மத வெறி ஊட்டுவதும்


சில விலைகள் குறைவதும் பல விலைகள் கூடுவதும்
பண வீக்கம் குறைவதும் மன வீக்கம் வளர்வதும்
மதுஅடிமையாவதும் பாலியல் குற்றங்கள் கூடுவதும்


அன்பு தளர்வதும் நற் பண்பு மறைவதும்
பகைமை பெருகுவதும் கொடுமை நிறைவதும்
உலகில் போர் மூழ்வதும் மக்கள் மாழ்வதும்


நில அதிர்வுகளும் விண் மீன்கள் விழுவதும்
கடல் பொங்குவதும் நிலம் அமிழ்வதும்
இறைவன் பெயரில் மக்களை ஏமாற்றுவதும்


இவை புதியதோர் உலகத்தின் உச்ச கட்டம்
இறைவன் வருகையின் ஆரம்ப கட்டம்.

    பால்ராஜ் சாமுவேல்


No comments:

Post a Comment