உள்ளம் ஏன் உள்ளே!
கண்களை வெளியே படைத்தார்
கண்டு களிக்கின்றோம்
செவியினை வெளியே செதுக்கினார்
கேட்டு மகிழ்கின்றோம்
மூக்கினை முன்னால் வைத்தார்
நுகர்ந்து இன்புறுகின்றோம்
வாயினை வாயிலாக வைத்தார்
உண்டு சுவைக்கின்றோம்
உள்ளத்தை ஏன் உள்ளே வைத்தார்
உணர்ச்சிகளை உறங்க வைக்க முடியவில்லையே!
என் எண்ணத்தில் எழுந்த கேள்விக்கு
விடை - வேதாகமத்தில்
"தேவன் தமது சித்தத்தின்படி அவயவங்கள்
ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்".
1 கொரிந்தியர் 12:18
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment