Thursday, 30 April 2015

Plantain Flower

வாழைப் பூ






பூத்துக் குலுங்கும் தோட்டத்தில்
தண்டுடல் கொண்ட வாழை
பட்டுடல் மேனி  கொண்டு
தன் மலர்க் கரம் கூப்பி
தரிசனம் தரும் காட்சி
என் கண்களை கவர்ந்தனவே!

எழில் பொங்கும் தோற்றத்தில் – தன்
பூவிதழ் விரித்து, பூ மணம் புகுத்தி
புன்னகை பூத்து இமை சூழ நின்று 
ஈர்த்தனவே தேனீக்களை தன்னகத்தே
தேனீக்கள் அமுதை சுவைத்திடும் காட்சி
என் கண்களை கவர்ந்தனவே!

மாலை மயங்கிய வேளையில் – தன்
பூவிதழ்களை மெல்ல உதிர்த்தனவே
நாளொரு மேனியாய் உரு மாறினவே
இரு திங்கள் கழிந்தனவே – காய் கனியாய்
வாழைக்குலையாய் நிற்கும் காட்சி
என் கண்களை கவர்ந்தனவே!
                   
                      பால்ராஜ் சாமுவேல்

Monday, 13 April 2015

Tamil New Year Greetings

புத்தாண்டு வாழ்த்து

தேனினும் இனிய செவிக்
கினிய தமிழினிலே உமக்
கணிகிறேன் என்னிதயங்
கனிந்த  வாழ்த்துக்களை!

இனியதோராண்டு கனிந்துளது
பிணி நீங்கி, இனி வாழ்
வினிதாய் கனிந்திட
பணிவுடன் வாழ்த்துகின்றேன்

மணி மணியான நாட்களில்
அணி அணியாய் செயல் வகுத்து
பணி கனிவுடன் புரிந்திடுவீரென – நும்
இனியன் இனிதாய் வாழ்த்துகின்றேன்.

பால்ராஜ் சாமுவேல்

Tuesday, 7 April 2015

Love Vs Lust

Love Vs Lust

Love is an art
Lust is a fruit
Love flourishes
Lust perishes
  
Love looks at heart
Lust looks at body
Love is milk
Lust is poison.
  
Love makes you child
Lust makes you wild
Love never fails
Lust ever fails.

Love anybody – Lust Nobody.

                                 Paulraj Samuel

Friday, 3 April 2015

My King

     என் அரசர்

கறை படிந்த பாவி நான் என்
குறைகளை முறையிடவே
தேடியே அலைந்தேன் ஓர் அரசனை
வாடியது என் உள்ளம் குறை தீர்க்கும்
அரசனை காணாமல்!

தேடியே வந்தார் ஓர் அரசன்
ஓடினேன் அவர் அருகே – அவர் தந்த
மறை நூல் கற்றேன், அவ் வழி நின்றேன்
என் கறை நீக்கி எனை அரவணைத்து
குறைகளை நிறைவாக்கினார்

                                யார் அந்த அரசர்?

மாளிகையில் மாவேந்தனாய் அல்ல
மாடடையில் மானிடர்க்காய்
பொற்றாடை உடுத்தி அல்ல
வெற்றுடலில் கந்தை பொதிந்தவராய்
ஏழை கோலமெடுத்தவரே
என் அரசர் - இறை மகன் இயேசு

பட்டுடுத்தி பல்லக்கில் பவனி வரவில்லை
கட்டுண்டு சிலுவையில் சிரம் சாய்த்தவராய்
கொட்டும் முரசுகள் ஒலிக்கவில்லை
சொட்டும் வேர்வையுடன் வேதனை சகித்தவராய்
பாரச் சிலுவை சுமந்தவரே
என் அரசர் - இறை மகன் இயேசு

பரிசுகள் எனக்களிக்கவில்லை
தன்னுயிர் நீத்தார் எனக்காய்
பரிசுத்தம் அடைந்தேன் – அவர்
சிலுவையில் சிந்திய இரத்தத்தால்
நித்தம் அவர் புகழ் பாடுவேன்
என் அரசர் இயேசுவே என்று

                 பால்ராஜ் சாமுவேல்