புத்தாண்டு வாழ்த்து
தேனினும் இனிய செவிக்
கினிய தமிழினிலே உமக்
கணிகிறேன் என்னிதயங்
கனிந்த வாழ்த்துக்களை!
இனியதோராண்டு
கனிந்துளது
பிணி நீங்கி, இனி
வாழ்
வினிதாய்
கனிந்திட
பணிவுடன்
வாழ்த்துகின்றேன்
மணி மணியான
நாட்களில்
அணி அணியாய்
செயல் வகுத்து
பணி கனிவுடன்
புரிந்திடுவீரென – நும்
இனியன் இனிதாய்
வாழ்த்துகின்றேன்.
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment