Monday, 12 October 2015

கோலங்கள்

கோலங்கள்
காலையில் கன்னியர் போடுவது மா கோலம்!
மாலையில் மாணவர் போவது ஊர் கோலம்!
இருவரும் இணைந்தால் மணக்  கோலம்!
காலம் கடந்தால்  பிள்ளைக் கோலம்!
பிள்ளையின் காலம் அலங்கோலம்!
பெற்றோர் இடுவது கண்ணீர் கோலம்!


                      பால்ராஜ் சாமுவேல்

Saturday, 3 October 2015

என்று தணியும் இந்த காயம்?

என்று தணியும் இந்த காயம்?

இரவினில் பெற்றோம் சுதந்திரம் என்றதாலோ
மறந்து அல்லது மறைத்து விட முயல்கின்றனர்
சரித்திரத்தில், நம் தேச பிதா மகாத்மா காந்தியயை!

இரவினில் பெற்றோம் சுதந்திரம் என்றதாலோ
குறைத்து அல்லது குலைத்து விட குவிகின்றனர்
நவீன இந்தியாவின் சிற்பி, மோதிலால் நேருவின் புகழை!

இந்திய தாயின் இதயம் நொறுங்குதே
குமுறுகின்றாள் பெருங்காயத்துடன்!
என்று தணியும் இந்த காயம்?
-       பால்ராஜ் சாமுவேல்-


Friday, 2 October 2015

தியாகச் சுடர் காமராஜர்

தியாகச் சுடர் காமராஜர்

சிவகாமி பெற்றெடுத்த காமராஜர்
தமிழனத்தின் தங்கத் தலைவர்
இந்தியா ஈன்றெடுத்த தவப் புதல்வர்
பார் போற்றும் பெருந்தலைவர்

தன்னலம் கருதா தியாகச் சுடர்  
பாமரர் வாழ்வின் ஒளி விளக்கு  
காமத்தை வென்ற அரசர்
காரிகை துணையின்றி வாழ்ந்தவர்

சிறைக்கஞ்சா உள்ளம் கொண்ட சிங்கம்
சிறையிலே எட்டு ஆண்டு வசித்தவர்
கறையிலா கரம் படைத்த கர்ம வீரர்
குறையின்றி காரியம் முடிப்பவர்

இலவச கல்விக்கு வித்திட்டவர்
சீருடை திட்டத்தை தீட்டியவர்
பள்ளியில் மதிய உணவு அளித்தவர்
இளம் உள்ளங்களில் இடம் கொண்டவர்

பதவி விரும்பா முடிசூடா மன்னர்
குழப்பம் நிறையும்போது கலங்காதவர்
சிந்தித்து செயல்படும் சிந்தனைச் சிற்பி
இந்திய அரசியலில் சாணக்கியர்

கண்ணீரை மாலையாக்கிடுவோம்
சொற்களை காணிக்கையாக்கிடுவோம்
சொர்க்கத்தில் கர்ம வீரர் காமராஜர்
சாந்தியுடன் சஞ்சரித்திட சிரம் தாழ்த்தி
இறைவனை தொழுவோம்.

 பால்ராஜ் சாமுவேல்