கதிரவன் உதயம்
என் சிந்தனைச் சிதறல்கள் கன்னியா குமரி கடற் கரையில்
அன்று உன் வருகையை ஜன்னல்
மூடி மறைத்தேன்
கனவு கலைந்திடுமென கண்
மூடிக் கொண்டேன்
இன்று நீ எப்பொழுது
வருவாய் என அதிகாலையில்
காத்திருக்கின்றேன் கன்னியா
குமரி கடற் கரையோரம்
கிழக்கு வானில் பல வர்ண
ஜாலங்கள் கண்டு மதி மயங்கினேன்
மெல்ல மெல்ல நீ எட்டி
பார்க்கும் உன் எழில் கோலம் கண்டு
செல்லமாய் உனை கட்டி
பிடித்திட எண்ணினேன்
கடல் அலைகள் கடுங்
கோபத்துடன் எனை தடுத்திட்டதே!
பால்ராஜ்
சாமுவேல்
No comments:
Post a Comment