வளர்ச்சியில்
மகிழ்ச்சி
ஆடி
பட்டம் தேடி விதைத்தேன்
நிதம்
காலை ஓடி நீர் பாய்ச்சினேன்
விதை
முளைத்ததை கண்டு வியந்தேன்
மண்ணின்
ஈரம் கண்டு எனை மறந்தேன்
தளிர்க்கின்ற
ஒவ்வொரு துளிரால்
பொங்கியது
என் இதயம் மகிழ்வால்
மொட்டு
விட என் மனம் பட்டாய்
பறந்திட
சிந்தனை வானில் சிறகடித்தது
மறு
நாள் மலர் கண் காட்சி கண்டு
மலர்ந்தது
என் மனம் சிகரம் தொட்டதாய்
காய்
கனிந்தது, கனி என் கரம் தவழ்ந்தது
மலைத்தேன்,
சுவைத்தேன் தேன் சுவை
மண்ணில்
புதைந்த வித்து நினைவில் வந்து
என்
இறப்பில் உன் கையில் நான் கனியானேன்
உன்
வாழ்வில் நீ யாருக்கு கனி கொடுக்கிறாய்
என
வினவியா வினா என் இதயத்தை உலுக்கியது
பால்ராஜ் சாமுவேல்

No comments:
Post a Comment