Tuesday, 22 September 2015

சிந்தனைத் துளிகள்


1.       இறைவனை இழித்துப் பேசிடாதே
      குறைகள் நிறைந்திடும்!

2.       காலமதை காலாட்டி கழிக்காதே
      ஓலமிட்டு அழ நேரிடும்!

3.       சோம்பேறியாய் திரிந்திடாதே - பல
 சோதனை க்குள்ளாவாய்!

4.       பஞ்சமென்பது நெஞ்சத்தில் வேண்டாம்மன
      சஞ்சலத்தில் முடியும்!

5.    கஞ்சத்தனம் கைகளில் வேண்டாம்
      வஞ்சம் வந்து சேரும்!

6.    கையூட்டு நடத்த வேண்டாம் – உன்
         கை பூட்ட படலாம்!
  
-    பால்ராஜ் சாமுவேல் -


Tuesday, 15 September 2015

Genesis 1 & 2  When the spirit of God moves  ……….

 When the spirit of God moves upon you..

     Darkness drifts away,  lights you up

•    Get His own image

•    Have dominion over all His creations

•    Get freedom but with restriction. 

•    Have to work though He provides everything

•    Get a companion  

    Are blessed to be fruitful and multiply
mylearnings
                  
                                                           

      

Friday, 4 September 2015

ஆசிரியர் - Teacher

என்னிடத்திலுள ஆறறிவையும்
கண் முன்னால் காட்டியவர் ஆசிரியர்

என் எண்ணத்தை ஏட்டில் எழுத
எழுத்தறித்தவர் என் ஆசிரியர்

கல்வி வானில் சிறகடிக்க
பயில்வித்வர் என் ஆசிரியர்

வாழ்வின் நல் வழிகளை தன்
விழியால் மொழிந்தவர் ஆசிரியர்
                         பால்ராஜ் சாமுவேல்
வாழ்க ஆசிரியர் குலம்     
வளர்க அவர் பணி


                                                                      

Wednesday, 2 September 2015

கண்ணில் மின்னிடும் கன்னியே

கண்ணில் மின்னிடும் கன்னியே
நெஞ்சில் தஞ்சம் புகுந்திடாயோ - உன்
பார்வை பாசக் கதவை தட்டுதம்மா
புன்னகையில் பாச மலர் அரும்புதம்மா

வாய் திறந்தால் முத்துப் பல் உதிர்ந்திடுமோ
பூவிதழில் அன்புக் குரல் மலரவில்லையே - நீ
சொல்லத்தான் நிணைக்கின்றயோ
சொற்களை நாணம் தடுக்கின்றதோ

ஒடும் மேகங்கள் உன் நிணைவினை
பாடும் தோழி என்றெண்ணினாயோ - உன்
அகத்தின் அழகினை முகத்தினில் காண்   
என சொல்லாமல் சொல்கின்றாயோ...


                      -பால்ராஜ் சாமுவேல்-

Wednesday, 26 August 2015

மாமன்

மாமன்

பஞ்சமென்று மாமனடி
தஞ்சமென்று புகுந்தேன்
கஞ்சியருள்வானென்று
நெஞ்சமதில் நினைத்தேன்

கஞ்சனவன் மிஞ்சிய
கஞ்சியையும் அவன்
தொந்தியிலே ஊற்றி
மந்தி போல் அமர்ந்தான்

மஞ்சம் தருவானென்று வந்தேன்
வஞ்சகன் பஞ்சணையில் அமர்ந்து
பெஞ்சு கூட தராமல் ஈரமற்ற
நெஞ்சுடன் திண்ணையைக் காட்டினான்

                                                -பால்ராஜ் சாமுவேல்-

Friday, 21 August 2015

RAINBOW

        வானவில்

கான மயில் தோகை விரித்தாடக் கண்டு
வானில் வலம் வந்ததோ வான வில்!
***
வானம் வண்ண ஆடை உடுத்தி வான வில்லாய்
கானம் பாடி மகிழ்கின்றதோ மழை மறைவதால்!
***
கதிரவன் கனல், மழை சாரலின் சந்திப்பில்
உதித்தது வானில் வானவில் வர்ண ஜாலமாய்!
***

பூவுலகை மழை மன்னன்
அழித்திட புறப்படுகையிலே
நிலவுலகின் மன்னவன்
தன் கனல் வீசி தடுக்கையிலே
மலர்ந்தது நடு வானில் ஏழு
வண்ண சமாதானக் கொடி - வான வில்!

              பால்ராஜ் சாமுவேல்


Wednesday, 19 August 2015

எண்ணில்லா பாவங்கள்

எண்ணில்லா பாவங்கள் எனை
கண்ணிருந்தும் குருடனாக்கிற்றே

     பாரும் தேவனே – பாவம்
     தீரும் ராஜனே

வாயிருந்தும் வாழ்த்தாது உமை
அருவருத்து அவமாக்கினேனே

     கேளும் தேவனே – எனை
     மீளும் ராஜனே

ஜீவ ஒளியாய் தேவனிருந்தும்  
பாவ வழி தேடி பறந்தேனே
           
சேரும் தேவனே எனை
            உம் பாதம் சேரும் ராஜனே


                     பால்ராஜ் சாமுவேல்