Wednesday, 26 August 2015

மாமன்

மாமன்

பஞ்சமென்று மாமனடி
தஞ்சமென்று புகுந்தேன்
கஞ்சியருள்வானென்று
நெஞ்சமதில் நினைத்தேன்

கஞ்சனவன் மிஞ்சிய
கஞ்சியையும் அவன்
தொந்தியிலே ஊற்றி
மந்தி போல் அமர்ந்தான்

மஞ்சம் தருவானென்று வந்தேன்
வஞ்சகன் பஞ்சணையில் அமர்ந்து
பெஞ்சு கூட தராமல் ஈரமற்ற
நெஞ்சுடன் திண்ணையைக் காட்டினான்

                                                -பால்ராஜ் சாமுவேல்-

Friday, 21 August 2015

RAINBOW

        வானவில்

கான மயில் தோகை விரித்தாடக் கண்டு
வானில் வலம் வந்ததோ வான வில்!
***
வானம் வண்ண ஆடை உடுத்தி வான வில்லாய்
கானம் பாடி மகிழ்கின்றதோ மழை மறைவதால்!
***
கதிரவன் கனல், மழை சாரலின் சந்திப்பில்
உதித்தது வானில் வானவில் வர்ண ஜாலமாய்!
***

பூவுலகை மழை மன்னன்
அழித்திட புறப்படுகையிலே
நிலவுலகின் மன்னவன்
தன் கனல் வீசி தடுக்கையிலே
மலர்ந்தது நடு வானில் ஏழு
வண்ண சமாதானக் கொடி - வான வில்!

              பால்ராஜ் சாமுவேல்


Wednesday, 19 August 2015

எண்ணில்லா பாவங்கள்

எண்ணில்லா பாவங்கள் எனை
கண்ணிருந்தும் குருடனாக்கிற்றே

     பாரும் தேவனே – பாவம்
     தீரும் ராஜனே

வாயிருந்தும் வாழ்த்தாது உமை
அருவருத்து அவமாக்கினேனே

     கேளும் தேவனே – எனை
     மீளும் ராஜனே

ஜீவ ஒளியாய் தேவனிருந்தும்  
பாவ வழி தேடி பறந்தேனே
           
சேரும் தேவனே எனை
            உம் பாதம் சேரும் ராஜனே


                     பால்ராஜ் சாமுவேல்

Monday, 3 August 2015

தாயில்லா வீடு

தாயில்லா வீடு


விடியுமுன் வீட்டு வாசலை தூற்றி கோலமிட்டிட
குல மகள் குடி கொண்டிரா குடும்பம்

தெய்வ கரங்களால் சமைத்து, அன்பு கரங்களால் அன்னமிட
அரும் பெரும் ஆஸ்தியையிழந்த இல்லறம்.

அடித்திட, அணைத்திட அரவணைக்கும் கரங்களில்லா
பார்த்து மகிழ்ந்திட கருணை முகம் காணா கானகம்

கண்ணிமை போல் காத்து பாசத்தை வாசமுடன் வீசிடும்
பாசமலரை பிரிந்து நிற்கும் மணம் அற்ற பூந்தோட்டம்

விழி மேல் விழி வைத்து வழி நடத்திட
கலங்கரை விளக்கின்றி கலங்கி நிற்கும் கப்பல்

இருள் நீக்கிட ஒளியின்றி, அருள் நிறைந்திட அன்பின்றி
பக்தி நிறைந்திட தெய்வமில்லா, துறவாமல் நடத்தும் துறவரமாகும்


                                                                  -பால்ராஜ் சாமுவேல்-