Monday, 3 August 2015

தாயில்லா வீடு

தாயில்லா வீடு


விடியுமுன் வீட்டு வாசலை தூற்றி கோலமிட்டிட
குல மகள் குடி கொண்டிரா குடும்பம்

தெய்வ கரங்களால் சமைத்து, அன்பு கரங்களால் அன்னமிட
அரும் பெரும் ஆஸ்தியையிழந்த இல்லறம்.

அடித்திட, அணைத்திட அரவணைக்கும் கரங்களில்லா
பார்த்து மகிழ்ந்திட கருணை முகம் காணா கானகம்

கண்ணிமை போல் காத்து பாசத்தை வாசமுடன் வீசிடும்
பாசமலரை பிரிந்து நிற்கும் மணம் அற்ற பூந்தோட்டம்

விழி மேல் விழி வைத்து வழி நடத்திட
கலங்கரை விளக்கின்றி கலங்கி நிற்கும் கப்பல்

இருள் நீக்கிட ஒளியின்றி, அருள் நிறைந்திட அன்பின்றி
பக்தி நிறைந்திட தெய்வமில்லா, துறவாமல் நடத்தும் துறவரமாகும்


                                                                  -பால்ராஜ் சாமுவேல்-

No comments:

Post a Comment